V/Puthukulam MV Banner


Latest Updates

இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எமது பாடசாலை மாணவர்கள் இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய எறிபந்து போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய எறிபந்து போட்டியில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவன் ந.நாவேந்தன் மற்றும் பாடசாலையின் பழைய மாணவனும் யாழ் பல்கலைகழக முதலாம் வருட மாணவனும் ஆகிய எ.ஜெனிஸ்ரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எமது பாடசாலையில் கட்டுறு பயில்வு ஆசிரிய மாணவர்களினால் இன்றையதினம் (07.05.2026) கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

எமது பாடசாலையில் கட்டுறு பயில்வு ஆசிரிய மாணவர்களினால் இன்றையதினம் (07.05.2026) கண்காட்சி நிகழ்வானது மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், பாடசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு.

மாவீரன் பண்டாரவன்னியனின் 222வது நினைவு தினம் பாடசாலையின் அதிபர் செ.யேசுநேசன் தலைமையில் (06.11.2025) நடைபெற்றது. இதன்போது பாடசாலை முன்புறமுள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற கிராம அலுவலர் தணிகாசலம் அவர்களும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.